காயம் காரணமாக விலகிய ரோகித் சர்மா! துணைக் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்!: பிசிசிஐ

20 ஓவர் வேர்ல்டு கப்புக்கு பின்னர் இந்திய அணி மிகவும் அதிரடியாக அனைத்து போட்டிகளிலும் விளையாடி கொண்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த நியூசிலாந்து அணியை அனைத்து போட்டிகளிலும் வீழ்த்தி இந்திய அணி மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது.

இந்த நிலையில் தென்னாபிரிக்காவுடனான இந்திய அணியின் போட்டி இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. இதில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி மூன்று டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த நிலையில் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா திடீரென்று காயம் காரணமாக விளங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி மூன்று ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார். ஆனால் 3 டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டனாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா காயம் காரணமாக போட்டியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது இடத்தை நிரப்பும் வகையில் துணை கேப்டனாக அதிரடி பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment