ஐபிஎல் கப் ஜெயிச்சதும்.. பிசிசிஐக்கு எதிரா ஷாருக் கான் செஞ்ச விஷயம்..இத கவனிக்காம விட்டுட்டோமே..

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணி வீரர்களும் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்களோ, அந்த அளவிற்கு அவர்களின் உரிமையாளர்களின் ஆதரவும் மிக அதிகமாக இருக்கும். அப்படி நாம் குறிப்பிட்டு சொல்லும் போது டக்கென நம் நினைவுக்கு வரும் அணியின் உரிமையாளர்கள் என்றால் நிச்சயம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷாருக்கான் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் தான்.

இவர்கள் இருவருமே பெரும்பாலும் தங்களின் அணி மோதும் போட்டிகளில் நேரடியாக மைதானத்திற்கு வருவதுடன் மட்டுமில்லாமல் ஒவ்வொரு வெற்றியையும் வீரர்களுடன் வீரர்களாக கொண்டாடி அவர்களை தொடர்ந்து தேற்றி வருவதன் காரணமாக வெற்றிகளையும் இந்த அணிகள் குவித்து வந்தனர். அதுமட்டுமில்லாமல் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளும் மோதி இருந்தது.

இதில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையும் சொந்தமாக்கி இருந்தது. மேலும் இந்த போட்டியையும் முழுவதுமாக கண்டுகளித்த கொல்கத்தா அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் போட்டி முடிந்த பின்னர் தனது அணியில் உள்ள அனைத்து வீரர்களுடன் இணைந்து ஃபோட்டோ மற்றும் வீடியோக்களையும் எடுத்துக் கொண்டார்.

இந்திய சினிமாவில் பெரிய நடிகராக இருக்கும் ஷாருக்கான், கொல்கத்தா அணியின் உரிமையாளராக இருந்தாலும் அவர்கள் தோல்வி அடைந்தால் கூட கிரிக்கெட் பற்றி பெரிதாக பேசாமல் தொடர்ந்து தேற்றுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். ஷாருக்கான் பற்றி ஒரு முறை பேட்டி ஒன்றில் பேசியிருந்த கௌதம் கம்பீர், அவர் ஒருபோதும் கிரிக்கெட்டை பற்றி வீரர்களிடம் பேச மாட்டார் என்றும் அந்த அளவுக்கு நெருக்கடி இல்லாமல் வைத்திருப்பார் என்றும் கூறி இருந்தார்.

அந்த அளவுக்கு தனது அணி வீரர்கள் மீது எந்தவித அழுத்தத்தையும் போடாமல், அசத்தலான ஒரு உரிமையாளராக இருந்து வரும் ஷாருக்கான், தற்போது கோப்பையை வென்ற போதும் கூட மிக ஆனந்தமாக மைதானத்தில் வலம் வந்தபடி இருந்தார்.

அப்படி இருக்கையில் அவர் செய்த விஷயம் ஒன்று தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தா வீரர் ஹர்ஷித் ராணா லீக் போட்டி ஒன்றில் விக்கெட் எடுத்ததும் ஃபிளையிங் கிஸ் கொடுத்து அதனை கொண்டாடி இருந்ததால் ஒரு போட்டிக்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டதுடன் அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது.

ஃபிளையிங் கிஸ் கொடுத்து கொண்டாடியதற்கு இப்படி ஒரு தண்டனையா என பலவிதமான விமர்சனங்களும் பிசிசிஐ விதி மீது எழுந்திருந்தது. இந்நிலையில், கோப்பையை கொல்கத்தா அணி கைப்பற்றிய பின்னர் ஷாருக்கான் அனைத்து வீரர்களுடன் சேர்ந்து ஃபிளையிங் கிஸ் கொடுக்க, பிசிஐக்கு மறைமுகமாக ஒரு பதிலடியையும் கொடுத்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...