News
பட்டங்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு: டெல்லி நபரின் வித்தியாசமான முயற்சி
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 23 லட்சத்தை தாண்டிவிட்டது என்பதும் தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவதால் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா முதல் இடத்தை அடைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்தியாவில் கொரனோ வைரஸிலிருந்து பொது மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த முகமது தக் என்ற நபர் பட்டங்கள் விடுவதன் மூலம் கொரனோ வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்

பட்டங்களிலும் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பது குறித்த தகவல்களை பிரிண்ட் செய்து அவர் பட்டங்களை விட்டு வருகிறார். இந்த படங்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படும் என்று அவர் நம்புகிறார்
இந்தியாவை விட்டு வெள்ளையனை வெளியேற்றியது போல் கொரோனாவையும் வெளியேற்றுவோம் என்றும் இந்த விழிப்புணர்வு மக்களைப் போய்ச் சேரும் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார் அவருடைய இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
