Connect with us

நாளை முதல் விடுமுறை நாட்களில் கிண்டி சிறுவர் பூங்காவிற்கு செல்ல அனுமதி!!!

Kind

தமிழகம்

நாளை முதல் விடுமுறை நாட்களில் கிண்டி சிறுவர் பூங்காவிற்கு செல்ல அனுமதி!!!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனாவின் தாகம் முடிவுக்கு வராத பட்சத்தில் சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு பல்வேறு தடைகளை விதித்திருந்தது.

அந்த வகையில் சென்னையில் இருக்கும் வண்டலூர் உயிரியல் பூங்கா, , கிண்டி சிறுவர் பூங்காவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. தொற்று பரவலானது குறைந்துள்ளதால் மீண்டும் செல்ல அரசு அனுமதியளித்தது.

இந்த சூழலில் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, நாளை முதல் சென்னை கிண்டியில் வார விடுமுறை நாட்களில்  சிறுவர் பூங்காவிற்கு செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது.

அதே போல் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருக்கும் வண்ணத்துப் பூச்சி பூங்காவிற்கு நாளை முதல் பார்வையாளர்களுக்கு மீண்டும் வாரவிடுமுறை நாட்களில் அனுமதிக்கப்பட்டுவதாக பூங்கா இயக்குனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நாளையொட்டி  நேற்று முந்தினம் விடுமுறை அளிக்கப்பட்டு இதற்கு பதிலாக  ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு  பூங்கா திறக்கப்படும் என தெரிவித்து இருப்பது  குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top