முதல்முறையாக வகுப்பறைக்கு போகும் அந்த தருணம்…..! நாளை முதல் மழலையர் பள்ளிகள் திறப்பு;
இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவ அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். ஏனென்றால் முன்பு நடைமுறையில் இருந்த ஊரடங்கு பிப்ரவரி 15ஆம் தேதியான செவ்வாய்க்கிழமையோடு முடிவுக்கு வர இருந்தது.
இதனால் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில் பலரும் எதிர்பார்த்திராத வகையில் பல அறிவிப்புகள் வெளியானது. அதன்படி தமிழகத்தில் உணவகங்களில் 100% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண அனுமதி வழங்கப்பட்டது.
திரையரங்கங்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்திருந்தது. பொருட்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.
இவைகளை எல்லாம் தாண்டி தமிழகத்தில் நர்சரி, மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளைய தினம் முதல் மழலைகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் நாளைய தினம் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான நர்சரி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதுவரை பார்த்திராத மழலையர்கள் நாளைய தினமே தங்களது முதல் பள்ளி தருணத்தை எதிர் கொள்ள உள்ளனர்.
