முதல்முறை பள்ளி தருணம்? பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மழலையர் பள்ளிகள் திறப்பு!

நம் இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனாவின் பாதிப்பு மிகவும் குறைந்து காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக தமிழகம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் கொரோனாவின் பாதிப்பு அதிதீவிரமாக குறைந்துள்ளது.

குறிப்பாக ஒரு சில நாள்களில் புதுச்சேரியில் கொரோனாவின் பாதிப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு புதுச்சேரியில் கொரோனாவின் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அங்கு மழலையர் பள்ளிகள் திறக்க உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன்படி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புதுச்சேரி முழுவதும் இன்று முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. புதுச்சேரியில்  மழலையர் பள்ளிகள் திறக்கப்படுகின்ற இந்த நாளில் புதுச்சேரி மாநிலத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் கண்டக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் அவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது பலருக்கும் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. நம் தமிழகத்தில் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு மழலைகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment