பொதுமக்கள் மீது கிம் ஜாங் உன் திடீர் பாசம்- இவரா இப்படி?

வடகொரிய அதிபராக பதவி வகித்து வருபவர் கிம் ஜாங் உன்.  உலகத்திலேயே மிகவும் குறைந்த வயது அதிபர் இவராகத்தான் இருக்கும்.

இவரின்  தந்தையும் சர்வாதிகாரியாக ஆட்சி நடத்திய நிலையில் சில வருடங்கள் முன் மறைந்தார். தன் தந்தையின் மறைவுக்கு பிறகு இவரும் கொடுங்கோல் ஆட்சிதான் நடத்தி வருகிறார்.

யாரும் சிரிக்க கூடாது பேசக்கூடாது சினிமா பார்க்க கூடாது என கடும் கட்டுப்பாடுகளை விதித்து வரும் கிம் ஜாங் உன் மக்களை மிக மோசமாக நடத்துவதாக கூறப்படுகிறது.

தவறு செய்த தன் தளபதியை வெட்டி நாய்க்கு உணவாக போட்டவர் என்றும், சில மாதங்கள் முன் தன் தந்தையின் நினைவு தினத்தை முன்னிட்டு வடகொரிய மக்கள் 15 நாள் சிரிக்க தடை போட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இவ்வளவு கொடுங்கோலனாக கருதப்பட்ட கிம் ஜாங் உன் நேற்று புது வருட விழாவில் பேசும்போது மக்கள் மீது கரிசனப்பட்டு பேசி உள்ளார் அவர் கூறியுள்ளதாவது.

வடகொரிய பொது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் ஐந்தாண்டு திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என கிம் ஜோன்ங் உன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர் வடகொரியாவில் பஞ்சம் நிலவுவதாகவும் 2022ல் பொதுமக்களுக்கு உணவுதான் முக்கியம் என்றும் அணு ஆயுதங்கள் எதுவும் தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment