இவர் இன்னும் என்னென்ன செய்ய போறாரோ தெரியல- கிம் ஜாங் உன்னின் லேட்டஸ்ட் அதிரடி

வட கொரியா அதிபராக பதவி வகித்து வருபவர் கிம் ஜாங் உன். இவரது அதிரடியால் அந்த நாட்டு மக்களே ஆடி போயுள்ளனர். இவரது தந்தையின் மறைவுக்கு பிறகு ஆட்சி செய்ய தொடங்கிய இவர் கொடுங்கோல் ஆட்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தனது தந்தையின் மறைவையொட்டி வரும் நினைவு நாளில் மக்கள் யாரும் சிரிக்க கூடாது என உத்தரவு போட்டார்.

அடிக்கடி ஏவுகணை சோதனை செய்து வரும் இவருக்கு பக்கத்து நாடுகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.

ஆனால் எதை பற்றியும் கவலைப்படாமல் தனது நாட்டில் ஏவுகணை சோதனைகளை இவர் செய்து வருகிறார். சமீபத்தில் பதவியேற்று 10 வருடங்கள் ஆன நிலையில் மக்களுக்கு அணு ஆயுதங்களை விட உணவுதான் தேவை என குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும் 2022ல் முதல் புத்தாண்டில் ஏவுகணையை வடகொரியா ஏவியுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணையை கிழக்கு கடலோர பகுதியில் இந்த நாட்டு ராணுவத்தினர் செலுத்தி சோதனை செய்துள்ளனர்.

இதற்கு தென் கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடுமையான சர்வாதிகார அரசை நடத்தி வரும் கிம் ஜாங் உன்னின் அரசை மக்கள் மறைமுகமாக எதிர்த்தாலும் அவரை எதிர்த்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதால் மக்கள்  குழப்பத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment