Connect with us

காவலர் மீது கார் ஏற்றி கொலை, அக்கா கணவரின் வெறிச்செயல்

156511 death1

செய்திகள்

காவலர் மீது கார் ஏற்றி கொலை, அக்கா கணவரின் வெறிச்செயல்

காவலர் மீது கார் ஏற்றி திட்டமிட்டு கொலை அக்கா கணவர் முன் விரோதத்தால் ஏற்பட்ட விபரீதம் மனைவி கொடுத்த புகாரின் பேரில் சந்தேகத்தின் பெயரில் ஐந்து பேர் கைது போலீசார் விசாரணை

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே உள்ள வடக்கு செய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் இவரது மகன் காமேஷ் குமார் 37; இவர் சென்னை நீலாங்கரையில் உள்ள காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார் வடக்கு செய்யூர். அதே பகுதியை சேர்ந்த மதன் பிரபுக்கும் காமேஷ் குமார் அக்கா செல்வியை காதலித்து கடந்த பத்தாண்டுகளுக்கு முன்புகாதல் திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன கடந்த ஒரு வாரமாக காமேஷ் குமாருக்கும் அவர் அக்கா செல்வியின் கணவர் மதன் பிரபுக்கும் சொத்து பிரச்சனை மற்றும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது

கடந்த ஒரு வார காலமாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறு விரோதத்தில் முடிந்திருக்கிறது அப்பொழுது மதன் பிரபு காமேஷ்குமாரை உன்னை கொலை செய்ய போவதா மிரட்டியும் இருக்கிறார் இந்நிலையில் நேன்று செய்யூர் பஜார் சாலையில் அரசு பள்ளி எதிரே காலை 11:30 மணி அளவில் காமேஷ் குமார் இருசக்கர வாகனம் பல்சரில் செய்யூரில் அமைந்துள்ள விவசாய நிலத்தை பார்வையிட்டு வீடு திரும்பிய போது செய்யூர் சால்ட் காலனிக்கு செல்லும் வழியில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையோரத்தில் நின்று கொண்டு நண்பருடன் செல்போனில் பேசிகொண்டு உள்ளார்

அப்போது சால்ட் காலனியில் இருந்து காமேஷ் குமார் அவர்களின் சகோதரியின் கணவர் மதன் பிரபு மற்றும் அவர் நண்பர்களுடன் ஃபோர்ட் ஈகோ ஸ்போர்ட் காரில் செய்யூர் நோக்கி அதிவேகமாக வந்து. சாலையோரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தைக் கண்ட மதன் பிரபு காரை முதல் நிலை காவலர் காமேஷ் குமார் மீது ஏற்றியுள்ளார். பலத்த காயம் ஏற்பட்டு காமேஷ் குமார் அதே இடத்தில் உயிரிழந்து உள்ளார்

முதலில் செய்யூர் போலீசார் விபத்து என வழக்கு பதிவு செய்தனர் காமேஷ் குமாரின் மனைவி ரேகா இது விபத்து அல்ல திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என புகார் அளித்தனர் அதன்பேரில் செய்யூர் போலீசார்

இவ் வழக்கை கொலை வழக்கமாக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதன் காரணமாக அதே பகுதியை சேர்ந்த 5 பேரை சந்தேகத்தின் பேரில் செய்யூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர் இந்நிலை காவலர் குடும்பத்தினர் 50க்கும் மேற்பட்டோர் செய்யூர் To பவுஞ்சூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் போலீசார் வந்து சமாதானப்படுத்தி முக்கிய குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தின்படி சாலை மறியல் கைவிடப்பட்டது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top