
பொழுதுபோக்கு
தளபதி 67 படத்தில் கில்லி வேலு மாஸான எண்டரி! வேற லெவல் அப்டேட்!
தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.மாநகரம் படத்தில் ஆரம்பித்து தனது சிறப்பான பயணத்தை தொடர்ந்து கைதி மாஸ்டர் விக்ரம் என மேலும் சிறப்பாக கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ்.
வங்கியில் பணியாற்றிய ஒருவர் எந்த விதமான பயிற்சியும் இல்லாமல் இது போன்ற தீவிரமான படங்களை எடுக்க முடியுமா என்ற வியப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் விக்ரம் படம் அவரை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்துள்ளது.
விக்ரம் படம் ரசிகர்களிடையே ஏற்படுத்திவரும் தாக்கம் தொடர்ந்து இன்றைய தினம் 25 நாளை திரையரங்குகளில் வெற்றிகரமாக துவங்கியுள்ளது. விக்ரம் படத்தின் காட்சியமைப்புகள் ரசிகர்களை திக்குமுக்காட செய்து தற்போது இந்த படத்தின் வசூல் 400 கோடி வசூலை பெற்றுள்ள நிலையில் இந்த வார இறுதியிலும் மேலும் படம் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதியுடன் லோகேஷ் இணைய உள்ளது உறுதியாக விட்டது. படக்குழுவினர் இந்த அறிவிப்பை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கடந்த விஜய் பிறந்த நாளில் அந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் வாரிசு படத்தின் அறிவிப்பு மட்டுமே வெளியானது ஆயினும் தளபதி திரைப்படம் குறித்த அப்டேட் தொடர்ந்து பல இடங்களில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதன் படி லோகேஷ் தளபதி 67 ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் விஜய் 40வது கேரக்டரில் நடிப்பதாக கூறப்பட்டது இந்த அறிவிப்பு கடந்த விஜயின் பிறந்த நாளில் வெளியாகாத நிலையில் தற்போது இது குறித்து லோகேஷ் கருத்து தெரிவித்திருந்தார்.
தற்போது ஒரு பேட்டியில் தனது வாரிசு படத்தை முடித்த பின்பு தளபதி படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். படம் குறித்த அறிவிப்பை தயாரிப்பு தரப்பு வெளியிட்ட பின்பே படம் குறித்து வெளிப்படையாக பேச முடியும் என்றும் அவர் கூறினார்.
வாரிசு பட போஸ்டர் டிசைனருக்கு மட்டும் இவ்வளவு சம்பளமா? ஏமாற்றத்தில் புலம்பும் படக்குழு!
