Connect with us

நடுவானில் பலி: ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பித்தபோது ஏற்பட்ட விபரீதம்!

செய்திகள்

நடுவானில் பலி: ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பித்தபோது ஏற்பட்ட விபரீதம்!

0a5fda99645a7e65c746404f38264f76

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து தப்பி செல்ல முயன்ற பொதுமக்களில் சிலர் நடுவானில் பலியாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் மற்றும் அரசுக்கும் இடையே நடைபெற்று வந்த போரில் தாலிபான்கள் வெற்றி பெற்று நாட்டை கைப்பற்றி உள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து அந்நாட்டில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர். இதனால் பேருந்துகள் ரயில்கள் போல விமான நிலையத்தில் கூட்டம் குவிந்தது. 

ஒரு சிலர் விமானத்தில் நின்று கொண்டும் தொங்கிக் கொண்டும் ஆபத்தான பயணம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் டயரில் நின்றுகொண்டு பயணம் செய்த 3 பேர் நடுவானில் திடீரரென மேலே இருந்து கீழே விழுந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top