பரமக்குடி அருகே மின்னல் தாக்கி மாணவர் பலி!

கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக விபத்துகள் மற்றும் மின்னல் தாக்கி பலியாகும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார்கோவில் பகுதியில் கஜினி என்ற மாணவர் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு இருக்கும் பள்ளியில் மாணவன் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த சூழலில் பள்ளி வளாகத்தில் மாணவன் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மின்னல் தாக்கி மாணவர் கஜினி இறந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மின்னல் தாக்கியதில் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment