சிறுநீரக கற்கள் உருவாவது ஏன்? யாருக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம்?

சிறுநீரக கற்கள் என்பது மிகுத்த வேதனையை தரக்கூடிய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாகக் காணப்படகின்றது. பெரும்பாலும் சிறிய கற்கள் சிறுநீரில் வெளியேறிவிடும். அது வலி, எரிச்சலை தருவதில்லை . இருப்பினும் சிறுநீரில் வெளியேற முடியாத அளவு உள்ள பெரிய கற்கள்தான் வலியை ஏற்படுத்துகின்றன. இதன் அறிகுறிகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால், நோய் தீவிரமடைவதைத் தடுக்க முடியும்.

சிறுநீரக கற்கள் உருவாவது ஏன்?

சிறுநீரக கல் உருவாகும் நபருக்கு பொதுவாகவே ஆரம்ப நாளில் இருந்தே ஒரு விதமான எரிச்சல் ஏற்படும். இதுதான் தொடக்கக்கால அறிகுறியாகக் காணப்படுகின்றது. சிறுநீரின் நிறம் மாறும். அடிக்கடி காய்ச்சல், குளிர் காய்ச்சல் வரலாம். உணவு செரிக்கும்போது அதிகப்படியான எரிச்சல் ஏற்படும். சிறுநீரின் நெடி, ஆடு சிறுநீர் போலக் கெட்ட நெடி வீசும்.

kidney stone 1
photo flat lay or top view very small kidney stone at two finger at blue background

சிறுநீரக கல் தோன்றுவதற்கு முக்கியக் காரணங்கள் என்ன?

பொதுவாக அதிக மசாலா சேர்த்த உணவு,இறைச்சி, முட்டை, செரிமானத்துக்குச் சிரமப்படும் அளவுக்குச் சாப்பிடுவது, புளிப்பு சுவை சார்ந்த பொருட்களை அதிகம் சாப்பிடுவது மற்றும் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது இதற்க்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

தனுஷின் வாத்தி படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு குறித்த மாஸ் அப்டேட்!

யாருக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம்?

முதலில் பித்த உடல் வாகு உள்ளவர்களுக்கு சிறுநீரக கல் உருவாவதற்கு வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. சிறுநீரக கல் உருவாகி பாதிக்கப்படுபவர்களில் அதிகமானோர் பித்த உடல் வாகு கொண்டவர்களாக உள்ளனர். அதிகமாக வியர்வை வெளியேறுபவர்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படலாம். அதிகப்படியான நேரம் மின்னணு பொருட்கள் மத்தியில் பணிபுரிவர்களுக்கு ஏற்படலாம். அதிக வெப்பம் வெளியிடப்படும் பகுதியில் நீண்ட நேரம் பணிபுரிவது, குளிரூட்டப்பட்ட அறையில் அதிக நேரம் பணிபுரிவது போன்ற செயல்களால் கூட சிறுநீரக கல் ஏற்பட வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகின்றது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment