சிறுநீரகம் செயலிழப்பு!! நடிகர் பெஞ்சமின் கண்ணீருடன் கோரிக்கை!!

சிறுநீரகம் செயலிழப்பால் நடிகர் போண்டாமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது சிகிச்சைக்கு உதவிடுமாறு நடிகர் பெஞ்சமின் கண்ணீரோடு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி தமிழ் சினிமாவில் கடந்த பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா போன்ற படங்களில் அவரது நடிப்பானது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் சிறுநீரகம் செயலிழப்பால் நடிகர் போண்டாமணி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் மேல் சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இலங்கையிலிருந்து வந்து தமிழகம் வந்த அவர் பல்வேறு தடைகளைத் தாண்டி சினிமாவில் என்ட்ரி கொடுத்தாக அவர் தெரிவித்தார்.

தற்போது தனியாக குழந்தைகளை விட்டுவிட்டு போய்விடக்கூடாது எனவும் நம்மால் முடிந்தவரை அவருக்கு உதவ வேண்டும் என கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.