பொதுவாக ஒவ்வொரு சட்டமன்றத்திலும் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியாகும் ஆனால் தற்போது இமாச்சல பிரதேச சட்டமன்றத்தில் அதிர்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது. ஏனென்றால் இமாச்சல பிரதேச சட்டப் பேரவையில் மற்றொரு இயக்கத்தின் கொடி கட்டப்பட்டுள்ளது.
அதன்படி இமாச்சலப் சட்டப்பேரவையில் காலிஸ்தான் இயக்கத்தின் கொடி கட்டப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச சட்டமன்றத்தின் வாயிற்கதவு மதில் சுவரில் காலிஸ்தான் கொடி கட்டியது குறித்து விசாரித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.
இமாச்சல பிரதேச சட்டப்பேரவையில் காலிஸ்தான் இயக்கத்தின் கொடிகளை கட்டியது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் கூறியுள்ளார். பஞ்சாபில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் தான் காலிஸ்தான் கொடிகளை இரவில் கட்டி சென்றிருக்கலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் காலிஸ்தான் இயக்கத்தின் கொடிகளை கட்டியது யார் என்பது பற்றி தீவிர விசாரணை நடைபெற்றுக் கொண்டு வருகிறது.