அடி தூள்..! ஒரே நாளில் பீஸ்டை ஓரம் கட்டிய கே.ஜி.எப் 2 ..
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படம் நேற்று உலகமெங்கும் வெளியாகியது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 2018- ம் ஆண்டு கன்னட திரையுலகில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாஸ் காட்டிய மட்டுமில்லாமல் வசூலிலும் பட்டையை கிளப்பியது. இப்படத்தில் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.
அந்த வகையில் இன்று உலகமெங்கும் கே.ஜி.எப் 2. வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று நல்ல விமர்சனங்கள் பெற்றுள்ளது.
இதனிடையே கே.ஜி.எப் 2 திரைப்படம் உலகளவில் சுமார் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் சாதனையை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே நேற்று வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 70 கோடி மேல் வசூலித்த நிலையில் கே.ஜி.எப் 2 திரைப்படம் அசால்ட்டாக பீஸ்டின் சாதனையை முறியடித்துள்ளது.
