பீஸ்ட் படத்திற்கு செக் வைக்கும் கேஜிஎப் 2 : ஷாக்கான தளபதி ரசிகர்கள் !!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் பீஸ்ட். இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் அடுத்த மாதம் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் கேஜிஎப் 2 படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பீஸ்ட் படம் வெளியான அடுத்த நாளே கேஜிஎப் 2 வெளியாகுவதால் பீஸ்ட் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தமிழகத்தில் 1000 திரையரங்குகளுக்கு மேலாக பீஸ்ட் வெளியிடப்படும் நிலையில் அடுத்த நாளே கேஜிஎப் 2 வெளியாகுவதால் பீஸ்ட் படத்தின் வசூல் 30 சதவீதம் குறையும் என தெரிவிக்ப்படுகின்றனர்.

மேலும், சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் வசூல் சாதனையை தற்போது வரை மற்ற படங்கள் முறியடிக்கப்படாத சூழலில்  பீஸ்ட் படம் அதனை முறியடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment