விஜய் உடன் மோதலா?… கே.ஜி.எஃப் நாயகன் யாஷ் சொன்ன அசத்தல் பதில்… வீடியோ இதோ!
விஜய் உடன் மோதலா?… கே.ஜி.எஃப் நாயகன் யாஷ் சொன்ன அசத்தல் பதில்… வீடியோ இதோ!
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்திற்கு போட்டியாக கேஜிஎஃப் 2 வெளியாகிறதா? என்ற கேள்விக்கு கன்னட நடிகர் யாஷ் கொடுத்த பதில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தில் இருந்து அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் வெளியாகி இணையத்தில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை அள்ளி வருகிறது.
இந்நிலையில் கன்னட திரையுலகின் முன்னணி ஹீரோவான யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான கே.ஜி.எஃப் படத்தின் பார்ட் 2 வெர்ஷன் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திலும் சஞ்சய் தத், ஸ்ரீநிதி அகர்வால், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், சரண் சக்தி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இரண்டு திரைப்படங்களுமே பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்து காத்திருந்த கே.ஜி.எஃப் 2, பீஸ்ட் இரண்டும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகியுள்ளதால், விஜய்யை நேரடியாக யாஷ் எதிர்ப்பதாக சோசியல் மீடியாவில் சர்ச்சைகள் வெடித்துள்ளது. இந்நிலையில் நேற்று கே ஜி எஃப் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த யாஷ், கேஜிஎஃப் அண்ட் பீஸ்ட் என்று தான் ரசிகர்கள் நினைக்க வேண்டும், கேஜிஎஃப் VS பீஸ்ட் என சண்டையிட்டுக்கொள்ளக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். திரைப்பட ரிலீஸ் ஒன்றும் தேர்தல் கிடையாது, அதில் ஓட்டை வைத்து தான் வெற்றியை தீர்மானிக்க முடியும். ஆனால் படத்தை பொறுத்தவரை இரண்டையுமே எல்லாருமே பார்க்கலாம். ஸ்ட் படத்தை நிச்சயம் நான் பார்ப்பேன். அதே போல விஜய் ரசிகர்கள் கேஜிஎப் 2 படத்தை நிச்சயம் பார்ப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Super Yash darling 😊 https://t.co/80jfpiPWt2
— RK SURESH (@studio9_suresh) March 27, 2022
