
Entertainment
அட்ராசக்க..! வசூலில் புதிய சாதனை படைத்த கேஜிஎஃப் 2 …. எத்தனை கோடி தெரியுமா ?
பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கேஜிஎஃப் 2. இந்த படத்தில் யாஷ்க்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா தாண்டன் ஆகியோர் நடிகர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இப்படமானது கடந்த 13-ம் தேதி உலகமெங்கும் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது.
இதனிடையே இப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் ரூ. 133 கோடி மற்றும் இரண்டாவது நாளில் 203 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த சூழலில் கேஜிஎஃப் 2 படம் வெளியாகி நேற்று வரையில் சுமார் 1006 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்தியாவில் இதுவரையில் 1000 கோடியை தாண்டியது 3 படங்கள் தான் என்ற நிலையில் தற்போது 4- வது படமாக கேஜிஎஃப் 2 இணைந்துள்ளது.
மேலும், வார விடுமுறை மற்றும் ரம்ஜான் போன்ற விடுமுறைகள் வருவதால் கேஜிஎஃப் 2 வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
