அடி தூள்..! அட்டகாசமான அப்டேட் வெளியிட்ட கே.ஜி.எப்-2.. என்ன தெரியுமா?

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் தான் கே.ஜி.எப்- 2. இந்த படத்தில் யாஷ் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா போன்றவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அடுத்த மாதம் ஏப்ரல் 14 ஆம் தேதி கே.ஜி.எப்- 2. ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே சமீபத்தில் கேஜிஎப் 2 படத்தின் டிரெய்லர் மார்ச் 27 ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாக இருப்பதாக ஹோம்பல் பிலிம்ஸ் (Hombale Films) டுவிட்டரில் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் கேஜிஎப் 2 படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஒரு பாடலின் லிரிக்கல், வீடியோ மார்ச் 21ம் தேதி காலை 11:07 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்து இருப்பது ரசிகர்களுக்கு உற்ச்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment