கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் நடிப்பில், இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி அண்மையில் வெளியான திரைப்படம் கேஜிஎப் 2. இந்த படத்தின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
படத்தின் முதல் பாகம் வெளியாகி 2 ஆண்டுகள் கழித்து கேஜிஎப் 2 படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியானது.இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.
இத்திரைப்படம் உலகம் முழுவதும் பான் இந்திய மொழிகளில் வெளியானதால் 1300 கோடிக்கு மேல் வசூல் செய்து இமாலய சாதனை படைத்தது.மேலும், இப்படம் மே மாதத்தில் ஓடிடி தளமான அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.
படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டளாக நடித்திருப்பார் யாஷ். திடமான தேகம், ஷார்ப்பான பார்வை, மிரட்டலான வசனம், அம்மாவுக்காக எதையும் சாதிக்கும் மனம் என ஒவ்வொரு காட்சியிலும், யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு நடித்து இருப்பார் யாஷ்.
இந்த படம் மே 27 ஆம் தேதி முதல் ஓடிடி தளமான அமேசான் பிரைம் தளத்தில் படமானது வெளியானது .
அடுத்ததாக கே ஜி எஃப் 1 கலர்ஸ் தமிழ் சேனலில் பலமுறை ஒளிபரப்பாகியது. தற்போது இரண்டாம் பாகம், எப்போது டிவியில் ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
‘வருகிறான் சோழன்’ – புதிய போஸ்டரை வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு!