இந்தியா-காஷ்மீர் பிரச்சினை உலகம் அறிந்த விஷயமாகும். காஷ்மீரின் சிறப்புச் சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து பல போராட்டங்கள் வெடித்தன.
இருப்பினும் தன் நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்காமல் எடுத்த முடிவு எடுத்ததுதான் என்று திட்டவட்டமாக கூறி விட்டது.
இந்தநிலையில் பாகிஸ்தானில் செயல்படும் கே.எஃப்.சி. நிறுவனத்தின் கிளை ஒன்று அவர்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காஷ்மீர் காஷ்மீரிகளுக்கு சொந்தமானது என்று பதிவிட்டது.
கே.எஃப்.சியை அடுத்து பீட்ஸா நிறுவனமும் காஷ்மீர் காஷ்மீரிகளுக்கு சொந்தமானது என்று பதிவிட, இந்தியாவில் கே.எஃப்.சி மற்றும் பீட்ஸாஹட்டைப் புறக்கணிப்போம் என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பதிவிட்டு இந்திய மக்கள் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
இந்தியாவில் ஏறக்குறைய 500 கடைகளைக் கொண்டுள்ள கே.எஃப்.சி நிறுவனம் தங்களின் வியாபாரம் பாதிக்கப்படும் என்று கருதி இந்திய மக்களிடம் இதுகுறித்து மன்னிப்புக் கோரும் வகையிலான பதிவு ஒன்றினைப் போட்டுள்ளது.
கே.எஃப்.சி. ட்விட்டரில், “ட்விட்டரில் வெளியான கருத்து மன்னிக்கக் கூடியது அல்ல நாங்கள் அதனை ஆதரிக்கவில்லை. நாங்கள் எப்போதும்போல் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கு சேவை செய்வதில் உறுதியாக உள்ளோம்” என்று பதிவிட்டுள்ளது.