இலங்கையில் விறகாக விற்கப்படும் தமிழக மீனவர்களின் விசைப்படகுகள்!!

நம் தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றால் அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்று இலங்கை கடற்படை கைது செய்வார்கள். ஒரு சில நேரங்களில் அவர்களது விசைப்படகுகள், நாட்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றி விடுவார்கள்.

இந்தநிலையில் இலங்கையில் ஏராளமான தமிழக மீனவர்களின் படகுகள் சிக்கிக்கொண்டு உள்ளதாக தெரிகிறது. ஆனால் அவற்றின் நிலையோ பரிதாபமாக காணப்படுகிறது. ஏனென்றால் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த அனைத்து தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் விறகாக விற்கப்படும் அவலம் நிகழ்கிறது.

ஏனென்றால் இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. எனவே அங்கு அனைத்து விதமான பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விறகாக  விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.

பழுது பார்க்க முடியாத நிலையில் உள்ள தமிழக விசைப்படகுகள் ஏலம் விடப்பட்ட நிலையில் உடைத்து விறகாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment