ஒரேநாளில் 44 கோடிக்கு அதிபதியான கேரளப் பெண்.. அபுதாபியில் அடித்த ஜாக்பாட்!

கேரளப் பெண் ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரபலமான பிக் டிக்கெட் லாட்டரி சீட்டினை வென்று கோடீஸ்வரி ஆகியுள்ள சம்பவம் வைரலாகி வருகின்றது.

கேரளாவைச் சார்ந்த பெண் லீனா ஜலால், இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார், அதாவது அபுதாபியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு கேரளாவில் இருக்கும்போதில் இருந்தே லாட்டரிச் சீட்டு வாங்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. பல ஆண்டுகளாக தான் கொண்டிருந்த லாட்டரிச் சீட்டு வாங்கும் பழக்கம் தற்போது அவரை கோடிஸ்வரி ஆக்கியுள்ளது.

பிக் டிக்கெட் லாட்டரியில் லாட்டரிச் சீட்டினை வாங்கிய நிலையில் கடந்த வாரக் குலுக்கலில் அவர் வாங்கிய சீட்டுக்கு பரிசு அடித்துள்ளது.

லீனா ஜலால் பரிசு வென்றதை பிக் டிக்கெட் அறிவித்ததையடுத்து, பரிசுத் தொகையினைக் கேட்டு ஷாக் ஆகியுள்ளார்.

அதாவது 44 கோடியே 75 லட்சம் ரூபாயை அவர் பரிசுத் தொகையாக வென்றுள்ளார். மேலும் லீனா இந்தப் பரிசின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனத்திற்கு வழங்க முடிவு எடுத்துள்ளதாகப் பேட்டி அளித்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment