News
உணவு பொட்டலத்துடன் டீ குடிக்க 100 ரூபாய் கொடுத்த பெண்: குவியும் பாராட்டுக்கள்
கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு வருவதை அடுத்து அங்கு ஏராளமானோர் வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்த நிலையில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் என்ற பகுதியைச் சேர்ந்த மேரி செபாஸ்டியன் என்ற பெண் தனது பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடிவு செய்தார்
இதனை அடுத்து அவர் தனது வீட்டில் உணவுகள் தயார் செய்து அதை பொட்டலங்களாக போட்டு அருகில் இருக்கும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை செய்தார்
அதுமட்டுமின்றி அந்த உணவுப் பொட்டலத்தில் ரூபாய் நூறு ரூபாய் நோட்டையும் வைத்து கொடுத்திருந்தார் இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அந்த உணவு பொட்டலத்தை வாங்கி பிரித்து பார்த்தபோது அதில் 100 ரூபாய் இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தனர்
இது குறித்து மேரி செபாஸ்டின் கூறும்போது தற்போது குளிர் மிகவும் அதிகமாக இருப்பதால் நான் கொடுத்துள்ள 100 ரூபாய் டீ குடிக்க உதவும் என்று அவர் கூறினார். குளிர்காலத்தில் டீ குடிக்கும் பழக்கம் அனைவருக்கும் உண்டு என்பதால் டீ குடிப்பதற்காக இந்த பணத்தை வைத்து இருந்தேன் என்று அவர் கூறியுள்ளார்
இதனை அடுத்து உணவும் கொடுத்து டீ குடிக்க காசும் கொடுத்த மேரி செபாஸ்டியன் என்ற பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
