முல்லைப் பெரியாறு அணை பற்றி வதந்தி பரப்பும் கேரளா! வருத்தத்தில் தமிழ்நாடு!!

தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கேரளாவில் பெய்த கனமழையால் அங்குள்ள பல மாவட்டங்கள் மழை நீருக்குள் மூழ்கியது. அதோடு மட்டுமில்லாமல் கேரளாவில் உள்ள பல அணைகளும் தொடர்ச்சியாக நிரம்பி வருகிறது.முல்லை பெரியாறு அணை

இந்த நிலையில் கேரள அரசு முல்லை பெரியாறு பாதுகாப்பு குறித்து வதந்திகள் பரப்பியதாக தமிழக அரசு கூறியுள்ளது. அதன்படி முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மை பற்றி கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

வதந்திகள்  பரப்புவது கவலை அளிக்கக் கூடியது என உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையில் தமிழக அரசு சார்பில் வாதம் நிகழ்த்தப்பட்டது. 141 அடிக்கு மேல் உயர்ந்திருந்தாலும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது என பல ஆய்வுகள் கூறுகின்றன என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

நிபுணர் குழுவின் ஆலோசனை நடத்தப்பட்டது என்றும், தீவிர கண்காணிப்பில் உள்ளது என்றும் மத்திய அரசு வழக்கறிஞரும் கூறினார். தமிழகத்திற்கு தேவையான நீர் கிடைப்பது குறித்து கேரள அரசு உறுதி அளித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கூறியுள்ளார்.

அணையின் நீர் அளவு அபாய கட்டத்தில் இல்லாதபோது தற்போது இதைப்பற்றி பேச அவசியம் என்ன? என்று நீதிபதி கேள்வி கேட்டார்.இதனால் முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தில் மாற்றம் தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய நீர்வள ஆணையம் தகவல் அளித்துள்ளது.

ஒன்றிய நீர்வள ஆணையத்தின் அறிக்கையை தாக்கல் செய்தபின் இந்த முல்லைப் பெரியாறு அணை வழக்கு விசாரணை நாளைய தினம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய நீர்வள ஆணையத்தின் அறிக்கைக்கு பதில் மனு தாக்கல் செய்ய அனைத்து தரப்பினருக்கும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment