கேரளாவில் பயங்கரம்… மந்தி பிரியாணி சாப்பிட்ட செவிலியர் உயிரிழப்பு!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் வசித்து வருபவர் ரேஷ்மி ( வயது 33). இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பிரபல உணவகத்தில் அல்பாமா சிக்கன் மற்றும் மந்தி பிரியாணி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதில் சிறிது நேரத்திலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து உடனடியாக மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமாகி வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ரெடியா இருங்க! அடுத்த 5 நாட்கள்.. இந்த மாவட்டங்களில் மழை!!

இந்த சூழலில் ரேஷ்மி சாப்பிட்ட உணவகத்தில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. சிக்கன் சாப்பிட்ட செலிவியர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை கிளப்பியது.

பின்னர் விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அதே போல் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 43 உணவகங்களை மூட உத்தரவிட்டு 138 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

லாரி சக்கரத்தில் சிக்கி பெண் என்ஜினீயர் உயிரிழப்பு – 2 ஓட்டுநர்கள் கைது!!

மேலும், கடந்த ஆண்டு கேரளாவில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.