கேரள பஸ் கட்டண உயர்வு – கேரள அமைச்சரவை ஒப்புதல்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதே போல் தமிழக அண்டை மாநிலமான கேரளாவிலும் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உயர்த்தப்படவிருக்கும் கட்டணங்கள்

குறைந்த பட்ச கட்டணம்- நகரப் பேருந்துகளில் – 7ரூபாயில் இருந்து 8

விரைவு பேருந்து- 10இல் இருந்து 11ரூபாய்

சூப்பர் எக்ஸ்பிரஸ்- 13இல் இருந்து 15 ரூபாய்

செமி டீலக்ஸ்- 20இல் இருந்து 22 ரூபாய்

ஏசி பஸ்கள்- 40 இல் இருந்து 44 ரூபாய்.

வால்வோ பஸ்களில் 40 இல் இருந்து 45ரூபாய்

என இருக்கக்கூடும் என அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர்  சுசீந்திரன் அறிவித்துள்ளார்.மேலும் பள்ளி மாணவர்களுக்கான சலுகைக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment