கேரளாவில் வினோதம்: டிவி ரிமோட் பேட்டரியை விழுங்கிய 2- வயது குழந்தை..!!!

கேரளாவில் 2 வயது குழந்தை டிவி ரிமோட்டின் பேட்டரியை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த தம்பதினர் ஒருவர் தங்களுடைய ரிஷிகேஷ் என்ற 2வயது குழந்தை டிவி ரிமோட்டின் பேட்டரியை விழுங்கியதாக மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக எண்டோஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து ஆபரேஷன் தியேட்டருக்கு சிறுவன் அழைத்து செல்லப்பட்டார்.

பின்னர் சுமார் 20 நிமிடங்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து வயிற்றிலிருந்து பேட்டரி 5 செ.மீ நீளம் மற்றும் 1.5 செ.மீ அகலம் கொண்ட பேட்டரியை வயிற்றில் இருந்து எடுத்தனர். பின்னர்

பின்னர் பேசிய இரைப்பை குடல் நோய் நிபுணர் ஜெயக்குமார் குழந்தை தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக கூறினார். அதே சயம் உரிய நேரத்தில் கொண்டு வந்ததால் எண்டோஸ்கோபி மூலம் வயிற்றில் இருந்து பேட்டரியை அகற்ற முடிந்ததாக கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.