பூமியை போலவே இன்னொரு பூமி கண்டுபிடிப்பு.. மனிதர்கள் வாழ்கிறார்களா?

பூமியை போலவே இன்னொரு கிரகம் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ள நிலையில் அந்த கிரகத்தில் மனிதர்கள் வாழ்கிறார்களா என்று ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட பூமியின் தன்மை போன்றே உள்ள கிரகம் ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடின பாறைகளால் ஆன இந்த கிரகத்தை கெப்லர் 10 சி என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கிரகம் இன்னும் முழுமையான தகவல் கிடைக்கவில்லை என்றும் பூமியின் தன்மை போலவே இந்த கிரகம் இருப்பதால் இந்தக் கிரகத்தில் மனிதர்கள் வாழ வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

planet1இது குறித்து ஆராய்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இங்குள்ள மனிதர்கள் அந்த புதிய கிரகத்துக்கு சென்றால் அவர்களின் எடை மூன்று மடங்கு அதிகரித்து காணப்படும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு பெரிதாக இருக்கும் இந்த கிரகத்தை சூப்பர் எர்த் என்றும் விஞ்ஞானிகள் அழைத்து வருகின்றனர். இன்னும் இது போன்ற பல விஞ்ஞான அதிசயங்கள் அண்டத்தில் இருப்பதாகவும் அதனை கண்டுபிடிப்பதுதான் தங்களது நோக்கம் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட பூமியைப் போலவே ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மனித இனத்திற்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.