Entertainment
இதெல்லாம் நானே பண்ணிட்டேண்டா- சசிக்குமார் கலாய்க்கும் கென்னடி கிளப் ஸ்னீக் பீக் காட்சிகள்
நாளை வெள்ளிக்கிழமையன்று சசிக்குமார் நடிக்கும் கென்னடி கிளப் படம் ரிலீஸ் ஆகிறது. விளையாட்டு மற்றும் காமெடி கலந்து கமர்ஷியலாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கபடி பயிற்சியாளராக சசிக்குமார் நடிக்கிறார். சூரியும் கபடி பயிற்சியாளராக காமெடி வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். இதற்கு முன் வெண்ணிலா கபடி குழுவில் இது போல ஒரு கதையை கையாண்ட இயக்குனர் சுசீந்திரன் நீண்ட இடைவேளைக்கு பிறகு அதுபோலதொரு கபடி கதையை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் காமெடி கலந்த சில காட்சிகள் ஸ்னீக் பீக் என்ற பெயரில் வெளியாகியுள்ளன.
