கீழச்சேரி மாணவி விவகாரம்: வெளியான திடுக்கிடும் தகவல்!!!

திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் சரளா என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணம் குறித்து விஷ பூச்சி கடித்து இறந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் மாணவியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மாணவியின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சூழலில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக உறுதி செய்த போலீசார் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், இறந்த மாணவியின் தோழிகளிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி பள்ளியில் மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவி உயிர் இருந்திருக்கும் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment