Entertainment
‘போட்ரா வெடியை’ விஜய் படத்திற்கு கீர்த்தி சுரேஷ் போட்ட டுவீட்
‘பைரவா’ படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ள நடிகை கீர்த்திசுரேஷ் போட்ட ஒரு டுவீட் ஒருநாள் முழுவதும் டுவிட்டர் டிரெண்டில் இருந்துள்ளது.
நேற்று மாலை விஜய்யின் ‘சர்கார்’ ஃபர்ஸ்ட்லுக் வெளியானதும் நடிகை கீர்த்திசுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘போட்ரா வெடிய! அட்ரா மேளத்த, வந்துட்டாரு சர்கார்’’ என்று டுவிட் செய்துள்ளார். இந்த டுவீட்டுக்கு இதுவரை 54ஆயிரம் லைக்ஸ்களும், 17 ஆயிரம் ரீடுவீட்டும் கிடைத்துள்ளது. மேலும் நேற்று மாலை முதல் இன்று மதியம் வரை இந்த டுவீட் டிரெண்டில் இருந்தது.
Podra vediya! Adra Melatha! Here arrives the #Sarkar ????????@actorvijay sir @ARMurugadoss sir @arrahman sir @sunpictures @Jagadishbliss pic.twitter.com/D6FxsrR0Af
— Keerthy Suresh (@KeerthyOfficial) June 21, 2018
இதனையடுத்து கீர்த்தி சுரேஷ், ‘சர்கார்’ படத்தின் இரண்டாவது லுக் வெளிவந்ததும் ‘அது மாஸ்’, இது கிளாஸ்’ என்று இன்னொரு டுவீட்டையும் பதிவு செய்தார்.
விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Adhu Mass , Idhu Class ! ✌️@actorvijay sir, @ARMurugadoss sir, @arrahman sir, @sunpictures @Jagadishbliss #Thalapathyswag #SarkarSecondLook #Sarkar pic.twitter.com/kvI5ISxCfv
— Keerthy Suresh (@KeerthyOfficial) June 21, 2018
