Entertainment
அஜீத் விஜய்க்கு புதிய பெயர் வைத்த கீர்த்தி
விஜய் நடிக்க வந்த புதிதில் ரசிகர் ஒருவர் வைத்த பெயர் இளைய தளபதி. நாளாவட்டத்தில் தளபதி என்று மாறி விட்டது. அதே போல் அஜீத் நடிக்க வந்து பல வருடங்கள் ஆகி விட்டது. 2000த்தில் வந்த தீனா படத்தில் இருந்து அவர் தல என்று அழைக்கப்படுகிறார்.

விஜய் அஜீத் ரசிகர்களை சந்தானம் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படம் வந்ததில் இருந்து தல தளபதி ரசிகர்கள் என்று அழைக்கிறார்கள். ஏனென்றால் அந்த படத்தில் தல தளபதி என்ற பெயரில் இரண்டு ரசிகர்களையும் பகைத்து கொள்ளாத அளவுக்கு தனது சலூன் கடைக்கு பெயர் வைத்திருப்பார் சந்தானம்.
உலகமே தல தளபதி என்றிருக்க நடிகை கீர்த்தி சுரேஷோ நிகழ்ச்சி ஒன்றில் நடிகை குஷ்பு ஜாலியாக
நீங்கள் என்ன பட்டப் பெயர் வைப்பீர்கள் கேட்ட கேள்விக்கு, அதற்கு பதில் அளித்த கீர்த்தி, அஜீத் ரொமான்டிக் ஹீரோ, விஜய்-டான்ஸிங் ஹீரோ, சூர்யா சென்டிமென்ட் ஹீரோ என்று பதில் அளித்தார்.
