Connect with us

தளபதி 66: விஜய்யுடன் 3வது முறையாக இணையும் பிரபல நடிகை!

thalapathi 66 9

பொழுதுபோக்கு

தளபதி 66: விஜய்யுடன் 3வது முறையாக இணையும் பிரபல நடிகை!

தளபதி 66: விஜய்யுடன் 3வது முறையாக இணையும் பிரபல நடிகை!

தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட நிறைவடையும் நிலையில் விரைவில் அவர் நடிக்கயிருக்கும் 66வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படத்தை வம்சி இயக்க இருப்பதாகவும் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய்யின் 66வது திரைப்படமான ’தளபதி 66’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதை அடுத்து இரண்டு மொழிகளிலும் பிரபலமான கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் நாயகியாக நடித்தால் பொருத்தமாக இருப்பார் என்று கருதப்படுகிறது

மேலும் ஏற்கனவே விஜய் நடித்த சர்ககார் மற்றும் பைரவா ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் மூன்றாவது முறையாக அவர் விஜய்யுடன் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top