சாவித்திரி வேடத்திற்கு கீர்த்தி சுரேஷ் செட் ஆக மாட்டார்: பழம்பெரும் நடிகை பேட்டி

a80824f0ff6b4c6e8711881dfef1109a

நடிகையர் திலகம் சாவித்திரி கேரக்டரில் பிரபல நடிகை கீர்த்திசுரேஷ் நடித்து வரும் நிலையில் இந்த கேரக்டருக்கு கீர்த்திசுரேஷ் செட் ஆக மாட்டார் என பழம்பெரும் நடிகையும் சாவித்திரியுடன் நடித்தவருமான நடிகை ஜமுனா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய நடிகை ஜமுனா, ‘நான் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். சாவித்திரியுடன் நடித்தவர்களில் நான் மட்டுமே உயிரோடு உள்ளேன். சாவித்திரியை பற்றி எனக்கு நிறைய தெரியும். அப்படி இருக்கும்போது படம் எடுப்பவர்கள் என்னிடம் ஆலோசனை எதுவும் கேட்காதது எனக்கு வேதனையாக உள்ளது.

சாவித்திரியாக நடித்து வரும் கீர்த்திசுரேஷூகு தெலுங்கு தெரியாது. தெலுங்கு தெரியாமல் அவரால் எப்படி சாவித்திரி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க முடியும்?

சாவித்திரியை போன்று சினிமாவில் வேறு எந்த ஒரு நடிகையும் சம்பாதிக்கவில்லை. அவர் வீட்டில் நீச்சல் குளம் கட்டினார். மைசூரில் இருந்து சந்தன கட்டைகளை வரவழைத்து பூஜை அறையை உருவாக்கினார்.

சாவித்ரியின் சென்னை வீடு அப்போதே ரூ. 1 கோடிக்கு போகும். எப்படியோ அனைத்து சொத்தும் போய் இறுதியில் மதுவுக்கு அடிமையாகி உடல் மெலிந்து கோமாவிலேயே இறந்துவிட்டார் என்று வருத்ததுடன் கூறினார் ஜமுனா

நடிகை ஜமுனா, கமல்ஹாசன் நடித்த ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் அவருக்கு தாயாராக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment