Entertainment
கீர்த்திசுரேஷின் அடுத்த பட டீசர் ரிலீஸ் தேதி: இந்த படமும் ஓடிடியில் தானா?
கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆனதையடுத்து அவர் நடித்த இன்னொரு படமும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் நரேந்திர நாத் இயக்கிய திரைப்படம் ‘மிஸ் இந்தியா. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
கீர்த்தி சுரேஷ், ஜகபதி பாபு, இராஜேந்திர பிரசாத், நவீன் சந்திரா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்க அடுத்த ஆண்டு வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த படத்தையும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டிரைலரிலேயே இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கீர்த்தி சுரேஷ் மிகவும் எதிர்பார்த்த திரைப்படமான பெண்குயின் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் மிஸ் இந்தியா திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்று கீர்த்தி சுரேஷுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
