கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து: 3 தமிழர்கள் பரிதாப பலி..!!!

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஆர்யன் ஏவிடேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்க சொந்தமான ஹெலிகாப்டர் விபத்தில் 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் கருட் சட்டி என்ற பகுதியில் இன்று காலை விமான விபத்து ஏற்பட்டது. இதனிடையே ஹெலிகாப்டரில் 7 பேர் பயணித்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தனர்.

இத்தகைய விபத்திற்கு அம்மாநில முதல்வர், பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். அதே சமயம் விபத்தில் உயிரிழந்தவர்கள் கேதார்நாத் உள்ளிட்ட இடங்களுக்கு சார்தாம் யாத்திரை சென்று திரும்பியவர்கள் என கூறப்படுகிறது.

இந்த சூழலில் உயிரிழந்த 7 பேரில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி, பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகியோர் சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என உத்தரகாண்ட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அங்கு மழைப்பெய்து வருவதால் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்படுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment