ஜெயலலிதாவின் நினைவு தினத்தை மாற்ற வேண்டும்.. கே.சி.பழனிசாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி காலமானதாக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் அவரது நினைவு தினத்தை மாற்ற வேண்டும் என அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் டிசம்பர் 5ஆம் தேதி இறந்தார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜெயலலிதாஇந்த நிலையில் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் நாளை அதிமுக சார்பில் அனுசரிக்கப்பட உள்ளதாகவும் நாளை காலை 9 மணிக்கு மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்தப்படும் என அதிமுக தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்த ஆறுமுகசாமி ஆணையம் டிசம்பர் 4ஆம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார் என்று கூறியதை அடுத்து ஜெயலலிதாவின் நினைவு தினத்தை டிசம்பர் 4 என மாற்ற வேண்டும் என அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

KCPalaniswamyBackToAIADMK750ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது எடப்பாடி பழனிசாமி என்றும் ஆணையத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியது ஓபிஎஸ் என்றும் எனவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரால் அமைக்கப்பட்ட ஆணையமே ஜெயலலிதாவின் உண்மையான மரணத் தேதி டிசம்பர் 4 என கூறியுள்ளதால் ஜெயலலிதா நினைவு தினத்தை டிசம்பர் 4ஆம் தேதி அதிமுகவினர் நினைவு தினமாக அனுசரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

குறைந்தபட்சம் அடுத்த ஆண்டிலிருந்து ஜெயலலிதாவின் நினைவு தினம் டிசம்பர் 4 என்பதை ஈபிஎஸ், ஓபிஎஸ் மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.