லாஸ்லியாவுடன் காதல் என்ன ஆச்சு?… முதன் முறையாக மனம் திறந்த கவின்!

சின்னத்திரையில் சீரியல்கள் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை செய்தியவாசிப்பாளர் லாஸ்லியாவுக்கும், கவினுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இடையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் தந்தை காதல் விவகாரத்தை கண்டித்த காட்சிகள் கூட ஒளிபரப்பாகின.

அதன் பிறகு கவின் – லாஸ்லியா காதலில் விழுந்த விரிசல் ஏற்பட்டது. சோசியல் மீடியாவிலும் காதல் பற்றிய கேள்விக்கு கவின் – லாஸ்லியா வாய்மூடி மெளனம் காத்து வந்தனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தனது காதல் விவகாரம் குறித்து கவின் வாய் திறந்துள்ளார்.

“காதல் என்பது பற்றி ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு புரிதல் இருந்திருக்கிறது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நாம் உண்மையாக நேசிக்கிற விஷயம் அல்லது ஆளுக்காக நாம் கடைசி வரை உண்மையாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட உண்மையான காதலை இன்னும் நான் தற்போதும் தேடிக்கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக ஒரு நாள் என்றைக்காவது அப்படி ஒரு விஷயம் அமையும். சந்தோசமாக ஒரு வாழ்க்கை கிடைக்கும் என நம்புகிறேன்”. எனத் தெரிவித்துள்ளார்.

இப்போது வரை நான் சிங்கிளாகவே வாழ்த்து வருகிறேன் என கவின் தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கவினை லாஸ்லியா கழட்டிவிட்டதை தான் இப்படி மறைமுகமாக சாடுகிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment