Entertainment
கவின்- லாஸ்லியா உறவு அதையும் தாண்டி புனிதமானது..
கமல்ஹாசன் நேற்று சேரனிடமிருந்து விலகியது ஏன் என்ற தோரணையில் கேள்வி கேட்க அப்போது லாஸ்லியா தன்னுடைய கருத்தினைக் கூறினார்.
நிகழ்ச்சி முடித்ததும் லாஸ்லியாவும் சேரனும் பேசினர். ஒரு வழியாக இருவரும் சமாதானம் ஆகியதாகத் தெரிந்தது.
அதன்பின்னர் கவினும் லாஸ்லியாவும் பேசிக்கொண்டு இருந்த போது, நடந்த விஷயங்களைக் கூறினார்.

இரவு லைட் ஆஃப் பண்ணிய பின்பு, லாஸ்லியா கவினுக்கு பாத்திரம் தேய்க்க உதவி செய்தார். அப்போது சேரன் லாஸ்லியாவிற்கு குட்நைட் சொல்ல லோஸ்லியா மீது பொஸ்ஸிவ் ஆனார்.
அப்போது நீ எதுக்கு இங்கே இருக்கேன்னு கவின் கேட்க, சும்மாதான்னு சொன்னார் லாஸ்லியா. நீ இந்த டீம்ல இருக்கியான்னு கேட்க. இல்லே நீ ஏன் இப்போ மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டு இருக்கேன்னு காதல் பொங்க கேட்டார்.
இங்கே நடக்கற டிராமாவை என்னால பார்த்துக்கிட்டு இருக்க முடியலை என்று கொஞ்சலுடன் கூறினார் கவின். எதுக்கு என்கிட்டே மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டு இருக்கேன்னு மறுபடியும் லாஸ்லியா கேட்டார், உடனே டிராமா உன்கிட்ட தானே நடக்குதுன்னு சொன்னார் கவின்.
இதே மாதிரியான சம்பவம் சாக்ஷி முகினுக்கு பொட்டு வைத்தபோதும் நடந்தது குறிப்பிடத்தக்கது. எப்பிடிப்பா உன்னால் மட்டும் இப்டி எல்லார்கிட்டயும் காதல் பொங்க பேச முடிகிறது என்கின்றனர் பார்வையாளர்கள்.
