கவின் – நயன்தாரா இணையும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் கவின் நடித்த ‘லிப்ட்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் அவரின் அடுத்த படத்தை நயன்தாரா தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கவின் நடிக்கும் திரைப்படத்திற்கு ’ஊர்க்குருவி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகியாக அறிமுக நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது இந்த படத்தை விக்னேஷ் சிவனின் உதவியாளர் அருண் என்பவர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment