18 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளுக்கு கவிமணி விருது! ₹25000 ரொக்கம், கேடயம் பரிசு!

இந்தியாவில் உள்ள பல எழுத்தாளர்களுக்கு அவ்வப்போது விருதுகள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் விருது வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி கௌரவிக்க திட்டமிட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அன்பில் மகேஷ்

இத்தகைய அறிவிப்பு குழந்தைகள் மத்தியில் மிகுந்த கொண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது. அதன்படி 18 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

இந்த கவிமணி விருதோடு மட்டுமில்லாமல் 25,000 ரூபாய் ரொக்கமும், கேடயம், சான்றிதழ் போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

இந்த இளம் படைப்பாளிகளிடமிருந்து தமிழில் கட்டுரைகள், சிறுகதைகளை பொது நூலக இயக்ககம் வரவேற்கிறது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இத்தகைய படைப்புகளை சமர்ப்பிக்க விரும்பும் இளம் படைப்பாளிகள் www.tamilnadupubliclibraries.org-க்கு அனுப்பலாம்.

ஏற்கனவே நவம்பர் 1ஆம் தேதி அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மிகுந்த உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது மாணவர்களுக்கு சந்தோசத்தை அளித்த நிலையில் தற்போது இத்தகைய அறிவிப்பு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment