என்னோட வரிகளை ரஹ்மான் ஓகேன்னு சொல்லணும்.. வாலி பயன்படுத்திய புது ட்ரிக்.. மிரண்ட எஸ் ஜே சூர்யா..

தமிழ் சினிமாவில் கவிஞர் கண்ணதாசனுக்கு பிறகு தனது வரிகள் மூலம் மிக முக்கியமான இடத்தை பிடித்திருந்தவர் தான் கவிஞர் வாலி. கண்ணதாசன் எப்போதுமே தன்னை சுற்றி நடக்கும் பல்வேறு சம்பவங்களின் அடிப்படையில் பாடல்களை எழுதி வரும் சூழலில், அதனையே படத்தின் கதைக்கு ஏற்ப வரிகளாகவும் மாற்றி அற்புதம் செய்யக் கூடியவர்.

கண்ணதாசனைத் தாண்டி அவரைப் போலவே ஒரு முக்கியமான இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்க வேண்டுமென போட்டியாக களமிறங்கியவர் தான் கவிஞர் வாலி. எம்ஜிஆர் காலம் தொடங்கி அனிருத் காலம் வரையில் ஏராளமான இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளார்.

படத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப, அது குத்து பாடலாக இருந்தாலும், காதல் பாடலாக இருந்தாலும், நண்பர்களைப் பற்றிய பாடலாக இருந்தாலும் தனது வரிகளை அதற்கு ஏற்ப அப்டேட் செய்து மிக அழகாக எந்த காலத்து ரசிகர்களும் ரசிக்கும் அளவுக்கு உருவாக்குவதில் கில்லாடி வாலி. அப்படி அவர் உருவாக்கிய பாடல்களை பட்டியலிட்டால் பல மணி நேரம் பேசிக் கொண்டே இருக்கலாம்.

அந்த அளவுக்கு கவிஞர் வாலி தனது வரிகள் மூலம் தமிழ் சினிமா பாடல்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில், இசையமைப்பாளர் ரஹ்மான் தனது வரிகளை ஓகே என சொல்வதற்காக கவிஞர் வாலி செய்த டெக்னிக் ஒன்றை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம்

எஸ் ஜே சூர்யாவை இன்று நடிகராக தெரிந்த பலருக்கும் அவர் எப்படிப்பட்ட இயக்குனர் என்பதும் தெரிந்ததே. வாலி, குஷி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ள எஸ் ஜே சூர்யா நியூ, அன்பே ஆருயிரே உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி நடிகராகவும் நடித்திருந்தார்.

அப்படி அவர் இயக்கத்தில் உருவான நியூ மற்றும் அன்பே ஆருயிரே திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் தான் இசையமைத்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களில் வரும் அனைத்து பாடல்களும் பெரிய அளவில் ஹிட் ஆகி இருந்த நிலையில், அன்பே ஆருயிரே படத்தில் வரும் ‘மயிலிறகே மயிலிறகே’ என்ற பாடல் வரிகளை வாலி தான் எழுதி இருந்தார்.

இன்று வரையிலும் சிறந்த மெலடி பாடலாக இருக்கும் இந்த வரிகளை எழுதிய பின் வாலி சொன்ன விஷயம் தான் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இது தொடர்பாக எஸ் ஜே சூர்யா நேர்காணலில் தெரிவித்த தகவலின் படி, மயிலிறகே மயிலிறகே என்ற வார்த்தையுடன் வரிகளை வாலி எழுதி உள்ளார். இதனை படித்ததும் எஸ் ஜே சூர்யா முழுமையாக திருப்தி அடையாதது போல இருந்துள்ளார்.

அவரை சமரசம் செய்த வாலி, ‘மயிலிறகே மயிலிறகே வரிகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. நீ ஏ. ஆர். ரஹ்மானிடம் சென்று கொடுத்து பார். அவர் ஒரு அல்லா பக்தன். நீ மயிலிறகு என்ற வரிகளை அவரிடம் காட்டி விட்டால், அல்லாவை மனதில் நினைத்து பாடல் நன்றாக இருக்கிறது என அவர் இசையமைக்க ஆரம்பித்து விடுவார்’ என கூறி கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளருக்கு ஏற்ப அவர்களை எப்படி சமரசம் செய்ய வேண்டும் என்ற விஷயத்தில் வல்லவராக இருந்த வாலியை பலரும் வியந்து தான் பார்க்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...