ரஜினிகாந்த் உடல்நிலை: காவேரி மருத்துவமனை அறிக்கை

ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த நாள திசைகளில் பிரச்சினை இருப்பதாகவும் அந்த பிரச்சனையை சரிசெய்யும் சிகிச்சைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின

இந்த நிலையில் சற்று முன்னர் காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ரஜினிகாந்த் அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் ரத்த ஓட்டத்தை சீர் அமைப்பதற்கான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்யப்பட்டது. தற்போது அவர் உடல் நலம் தேறி வருகிறார். இன்னும் ஒரு சில நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த அறிக்கையை அடுத்த ரஜினி ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

FC21a46UUAsVTRB

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print