கட்டிக்குளத்தில் வாழ்ந்த கட்டித்தங்கம் சூட்டுக்கோள் மாயாண்டி ஸ்வாமிகள் சித்தர்

நம் பாரத பூமியில் எத்தனையோ மகான்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் செய்த அற்புதங்கள் ஏராளம் அப்படி ஒரு மகானாக கடந்த 20ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சூட்டுக்கோள் மாயாண்டி ஸ்வாமிகள் அவ்ர்கள்.

மதுரை ராமேஸ்வரம் சாலையில் உள்ள மதுரைக்கு மிக அருகில் உள்ள திருப்பாச்சேத்தியில் பிறந்தவர் இவர்.

இவரிடம் சூடான கோல் ஒன்று இருக்கும் அதை எடுத்து தன்னிடம் தங்கள் குறைகளை சொல்ல வருபவரிடம் நீட்டுவார் நியாயம் அவர்கள் பக்கம் இருந்தால் அந்த கோல் சுடாது. அவர் அநியாயக்காரராக இருந்தால் அந்த கோல் சுடும் அப்படி சுடும்போது என்ன அப்பு உண்மை சுடுதா என கேட்பார்.

பின்பு அவரை மன்னித்து அவர் பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றுவார். பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இவர் தோற்றத்தை பார்த்து வெள்ளைக்கார டிக்கெட் பரிசோதகர் அவரை டிரெயினில் இருந்து இறக்கி விட்டுள்ளார்.  இவரை இறக்கி விட்டவுடன் ரயில் அசையவில்லையாம் என்ன முயன்று பார்த்தும் டிரெயின் அசையாததால் பின்பு தவறை உணர்ந்து இவரை டிரெயினில் ஏற்றிய பிறகுதான் டிரெயின் புறப்பட்டதாம்.

இவர் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் சென்று சில காலம் வாழ்ந்தார். அங்கு இருந்த கருப்பண்ண கோனார் என்ற பணக்காரருக்கு பூர்வ ஜென்ம கர்ம வினையினால் வாழ்க்கை முடிய இருப்பதை அறிந்து 40 நாட்கள் அவருக்காக தவம் இருந்து அவரை அப்பிரச்சினையில் இருந்து காப்பாற்றினார்

பிறகு சில நாட்கள் கழித்து திருப்பரங்குன்றம் அருகில் உள்ள திருக்கூடல் மலையில் அங்கேயே ஜீவசமாதி ஆனார். அதனால் அவருக்கு கருப்பன்ண கோனாரே கோவில் கட்டினார்.

இன்றும் இவருக்கு ஒரு வார வழிபாட்டு மன்றம் வைத்து இவரை வணங்கி வருகின்றனர். இவர் இன்றும் பக்தர்கள் வாழ்வில் செய்து வரும் அற்புதங்கள் ஏராளம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.