கிராமத்து ஸ்டைல் கத்திரிக்காய் எண்ணெய் ஊறுகாய் வீட்டிலேயே செய்ய முடியுமா?

ஊறுகாய் என்பது நமது உணவு முறையில் பழங்காலத்திலிருந்து இந்த காலம் வரை இருக்கும் ஒரு முக்கிய பொருளாகும். ஊறுகாயில் பல வகை இருந்தாலும் கத்திரிக்காய் எண்ணெய் ஊறுகாய்க்கு என ஒரு தனி கூட்டம் எப்போதும் உண்டு. அந்த கத்திரிக்காய் எண்ணெய் ஊறுகாயை கிராமத்து ஸ்டைலில் நம்மால் வீட்டிலேயே செய்ய முடியும்.

katrikai urukai

தேவையான பொருட்கள்:-

பிஞ்சு கத்திரிக்காய் – 1/4 கிலோ,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
புளி – தேவையான அளவு,
எலுமிச்சை தேவையான அளவு,
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
வெந்தயப்பொடி – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

தேங்காய் பூவில் என்ன என்ன சத்துக்கள் இருக்கு தெரியுமா? இதோ!

செய்முறை:-

கத்திரிக்காயைக் தண்ணீரில் நன்கு கழுவி, அதனை நீளவாக்கில் வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். புளியைக் நன்றாக கெட்டியாக கரைத்து அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, மல்லித்தூள், வெந்தயப்பொடி,மஞ்சள்தூள் இவையனைத்தையும் சேர்த்து, கத்திரிக்காய் உடன் ஊற்றிக் நன்றாக கிளறவும். பின்னர் அதை ஒரு நாள் அப்படியே நன்கு ஊற விடவும். அப்போதுதான் அந்த கரைசல் கத்தரிக்காயினுள் நன்கு உள்ளே போகும். மறுநாள் இந்தக் கரைசலை வடிகட்டி, அதை வெயிலில் காய வைக்கவும். பின்னர் தாய் எடுத்து சிறிதளவு எண்ணெயைக் காய்ச்சி அதில் ஊற்றிக் நன்கு கலக்கவும். பின்னர் அதில் கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் இவற்றை எண்ணெய் விட்டு தாளித்து, அதை எண்ணெய் கலந்த கத்திரிக்காயில் சேர்த்தால் கத்திரிக்காய் எண்ணெய் ஊறுகாய் ரெடி. இந்த ஊறுகாயை சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு என எதற்கும் தொட்டு சாப்பிடலாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment