கச்சத்தீவு திருவிழா 100 பக்தர்களுக்கு அனுமதி… வெளியானது அதிரடி அறிவிப்பு!

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா வரும் 11 மற்றும் 12 ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 100 பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர்.

கச்சத்தீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் 100 பேர் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா வரும் 11 மற்றும் 12 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளது.

திருவிழாவில் இந்தியாவில் இருந்து 50 பக்தர்களும் இலங்கையில் இருந்து 50 பக்தர்களும் கலந்து கொள்ள இலங்கை அரசு முடிவு செய்திருந்த நிலையில் இந்தியாவில் இருந்து மேலும் 50 பக்தர்கள் பங்குபெற இலங்கை அரசு திடீர் அனுமதி அளித்துள்ளது.

இதனையடுத்து வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 100 பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொள்வார்களா அல்லது ஒருநாள் நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில் முன்பு பதிவு செய்த 50 நபர்கள் மட்டும் செல்ல உள்ளனரா என்பது நாளை தெரிய வரும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment