ரஜினி குறித்த பதிவுக்கு வருத்தம் தெரிவித்த கஸ்தூரி!

218b250697bebc5dd1b6863a2033eeb3

ரஜினிகாந்த் குறித்து பரபரப்பான கேள்வி எழுப்பிய நடிகை கஸ்தூரி தற்போது வருத்தம் தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் ரஜினிகாந்த் அமெரிக்கா திடீரென சென்றது ஏன் என்றும், அமெரிக்காவில் தற்போது இந்தியர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் ரஜினிகாந்துக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது என்றும், அவர் அரசியலில் இருந்து விலகியதற்கும் அமெரிக்கா செல்வதற்கும் தொடர்பு உண்டா என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார் 
அதன்பின் ஓரிரு நாட்கள் கழித்து தனக்கு அலைபேசியில் அழைத்து விவரம் கூறியதாகவும் ஆச்சரியம் கலந்த நன்றி என்றும் நல்ல செய்தியை விரைவில் சொல்கிறேன் என்றும் தலைவரை வரவேற்க தயாராக வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்

ஆனால் ரஜினிகாந்த் தரப்பினரோ, அவருடைய குடும்பத்தின் தரப்பினரோ யாருக்கும் விளக்கம் அளிக்கவில்லை என்றும் ரஜினிகாந்தின் பிஆர்ஓ தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின் கஸ்தூரி இது குறித்து விளக்கமளித்தார். கங்கை அமரன் அவர்கள் தான் தனக்கு இந்த தகவலை சொன்னதாகவும், தற்போது அது குறித்து வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் கூறி டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த ட்விட்டில் கூறியிருப்பதாவது

நேற்று அமர் சார் அழைத்து பேசியது அவர் தனிப்பட்ட கருத்தாக எனக்கு தொனிக்கவி‌ல்லை. என் புரிதல் தவறென்றால் வருந்துகிறேன். இடம் பொருள் கருதி பெயரை சொல்லாமல் பொது பதிவிட்டது பொய் என  திரிந்தது மேலதிக வருத்தம். தவறு புரிதலில். கேள்வியில் அல்ல என்று கூறியுள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.