Entertainment
சீக்ரெட் ரூம் வாய்ப்பை நிராகரித்த கஸ்தூரி!!!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி எப்போதும் மிக சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கக்கூடியது. வார இறுதி அப்டின்னாவே எலிமினேஷன் தான் என்பது தெளிவாகத் தெரிந்த ஒன்றுதான். நேற்றைய நிகழ்ச்சியில் எலிமினேஷனை எட்டியபோது அனைவரும் சற்று கூடுதல் பதற்றத்துடனே இருந்தனர்.
அப்போது எதிர்பார்த்ததைபோல தர்சன் மற்றும் சாண்டி காப்பாற்றப்படுவதாக அறிவித்தார்.

இந்த வார நாமினேஷன் பட்டியலில் இருந்தது சாண்டி, தர்சன், சேரன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் ஆவர். வெளியேறப் போவது சேரனா அல்லது கஸ்தூரியா? என்ற கேள்விக்கு இடையில், நுழைந்து 17 நாட்களே ஆகிய நிலையில் கஸ்தூரி இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
வெளியேற்றப்படுவதாக அறிவித்தபின் அவர் எவ்வித வருத்தமும் இன்றி, அனைவருக்கும் விடை கொடுத்தார். பிறகு வெளியில் வந்த ஹவுஸ்மேட்ஸிடம் பேசினார்.
அதன்பின்னர் கமல்ஹாசன் கஸ்தூரிக்கு சீக்ரெட் ரூம் வாய்ப்பை வழங்கினார் கமல். இது பார்வையாளர்கள் பலரும் எதிர்பார்த்த ஒரு விஷயமே ஆகும், ஆனால் கஸ்தூரி சீக்ரெட் ரூம் செல்வார் என்று எதிர்பார்க்க, அதை கஸ்தூரி ஏற்க மறுத்துவிட்டார், கமல் ஹாசன் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியபோதும், குழந்தைகள் குரலை கேட்ட பின்பு பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்க முடியாது என்று கூறிவிட்டு வெளியேறினார்.
